JNU பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல்;சுமார் 60 பேர் காயம் – எப்ஐஆர் பதிவு!

ராம நவமி தினத்தை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.பின்னர்,பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவு பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,ராம நவமி தினத்தை முன்னிட்டு அசைவ உணவுகளை சாப்பிட கூடாது என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களிடம் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் பிரச்சனை செய்துள்ளனர்.

இதனால் இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஆகிய இரு தரப்பிலும் சுமார் 60 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மாணவர்கள்இடையே ஏற்பட்ட  மோதலை கட்டுபடுத்தினர்.பின்னர் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.இதனையடுத்து,இன்று அதிகாலை  JNUSU, SFI, DSF மற்றும் AISA ஆகிய அமைப்பினர் அடையாளம் தெரியாத அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அடையாளம் தெரியாத ஏபிவிபி மாணவர்கள் மீது எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

author avatar
Rebekal