ராமர் சிலைக்கு 15 கிலோ தங்கம்,18,000 வைரங்கள், மரகதங்கள் அலங்கரிப்பு.!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி, முக்கிய விஐபிக்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என ஏரளாமானோர் நேற்று அயோத்தியில் ராமரை பார்க்க குவிந்தனர்.

பெரும் சர்ச்சைக்கும், எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று அயோத்தியில் திறக்கப்பட்ட ராமர் கோயிலில், இன்று முதல் பக்தர்கள் தரிசிக்கலாம் என கூறப்பட்ட நிலையில்,  நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் வருகை புரிந்து, நீண்ட வரிசையில் நின்று ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

தற்பொழுது, ராமர் சிலைக்கு எவ்வளவு நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ராமரை ஐந்து வயது குழந்தையாக சித்தரிக்கும் ராமர் சிலையின் பிரதிபலிக்கும் அற்புதமான நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த நகைகள் செய்வதற்கு 15 கிலோ தங்கம் மற்றும் 18,000 வைரங்கள் மற்றும் மரகதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அயோத்தி ஹனுமன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

சிலைக்கு ஒரு கிரீடம், நான்கு நெக்லஸ்கள், ஒரு இடுப்புப் பட்டை, இரண்டு ஜோடி கணுக்கால்கள், விஜய் மாலா, இரண்டு மோதிரங்கள் என மொத்தம் 14 துண்டுகள் கொண்ட அற்புதமான நகைகள் வெறும் 12 நாட்களில் செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்கத்தால் ஆன காப்பு, கவசங்கள் சிலையை அலங்கரிக்கின்றன. அது மட்டும் இல்லமால் தங்க அம்பு ஒன்றையும் ராமர் ஏந்தியிருக்கிறார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.