தமிழகத்தில் நாளை முதல் 14,757 சிறப்பு பேருந்துகள்..!

தமிழகம் முழுவதும் நாளை முதல் 14,757 தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் வருகின்ற 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச்செல்லும் வசதிக்காக தமிழகம் முழுவதும் 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் தற்போது குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் நாளை முதல் 3 நாட்களுக்கு இயக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மொத்தமாக இயக்கப்படும் 14,757 பேருந்துகளில் சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு 9,510 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் 11-ஆம் தேதி அதாவது நாளை 2,225 பேருந்துகளும், 12-ஆம் தேதி 3,705 பேருந்துகளும், 13-ஆம் தேதி 3,580 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மற்ற மாவட்டங்களுக்கு 5,247 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள ஐந்து சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக, கூடுதலாக 310 சிறப்பு இணை பேருந்துகள் 3 நாட்களுக்கு இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

author avatar
murugan