#Breaking:இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 91,702 பேருக்கு கொரோனா பாதிப்பு;மொத்தம் 3.63 லட்சம் பேர் உயிரிழப்பு.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 91,702 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 3,403 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,92,74,823 ஆக அதிகரித்துள்ளது.

  • கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 91,702 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 2 ஆயிரம் குறைவாக உள்ளது.
    கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,92,74,823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 3,403 ஆக பதிவாகியுள்ளது, இதுவரை இந்தியாவில் 3,63,079 பேர் உயிரிழந்துள்ளனர்.
    தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,34,580 பேர் குணமடைந்துள்ளனர்.
  • இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,77,90,073 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11,21,671 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாட்டில் இதுவரை 24,60,85,649 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.