வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பம்.! தேர்தல் அதிகாரி தகவல்.!

  • தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.
  • அதில் ஒட்டுமொத்தமாக சுமார் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் விண்ணப்பதாரர்கள் பெயர் சேர்ப்பு, பெயர் திருத்தம், மற்றும் முகவரி மாற்றம் செய்ய மாவட்டவாரியாக விண்ணப்பிக்கப்பட்டது. தற்போது திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். அதன்படி, அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 89 ஆயிரம் பேர் விண்ணப்பித்து, குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் சுமார் 9 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்காக அதாவது, 18 வயது நிரம்பியவர்கள் மட்டும் சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், மற்றும் பெயர் நீக்கம் செய்ய, சுமார் 1 லட்சம் பேரும், முகவரி மாற்றம் செய்ய சுமார் 1 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள சுமார் 1 லட்சத்து 73 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக சுமார் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.