20 வயது இளைஞரின் வயிற்றில் 13 ஹேர்பின், 4 சேஃப்டி பின், 6 பிளேடுகள்..! அதிர்ச்சியில் மருத்துவர்கள்…!

புதுச்சேரியை சேர்ந்த இருபது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் அவரை புதுச்சேரியில் உள்ள GEM மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த இளைஞரின் வயிற்றில் பிளேடு, ஹேர் பின் மற்றும் ஊக்குகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த இளைஞர் பல நாட்களாக இவற்றை தின்னும் பழக்கம் உடையவராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது வயிற்றில் இருந்து மருத்துவர்கள் Endoscopyசிகிச்சை மூலம் 13 ஹேர்பின்கள், 5 ஊக்குகள், 5 பிளேடுகள்  உள்ளிட்ட பொருட்களை அகற்றினர்.

இந்த சிகிச்சை அந்த இளைஞருக்கு 6 மணி நேரம் நடைபெற்றுள்ளது. சிகிச்சையின் மூலம் இந்த பொருட்கள் அவரது வயிற்றில் இருந்துஅகற்றப்பட்டது. இதனை எடுத்து மறுநாளே அவர் மருத்துவமனையில் இருந்து ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பின் அவர் வழக்கமான உணவுகளை சாப்பிட்டுள்ளார்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் நாங்கள் ஒரு குழுவாக இணைந்து தான் இந்த சிகிச்சையை சிறப்பான முறையில் செய்துள்ளோம். இந்த செயல்முறை சவாலாக இருந்தாலும் மிகுந்த கவனமுடன் செய்துள்ளோம். அவரது வயிற்றில் இருந்த பொருட்கள் அனைத்துமே கூர்மையான பொருட்கள். தற்போது அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.