4 வெளிநாட்டவர்கள் உட்பட 13 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது..! ரூ.2.48 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்..!

பெங்களூரில் 4 வெளிநாட்டவர்கள் உட்பட 13 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது.

பெங்களூரு காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் 4 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 13 போதைப்பொருள் கடத்தல்காரர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து ரூ.2.48 கோடி மதிப்புள்ள 1.5 கிலோ எம்டிஎம்ஏ கிரிஸ்டல் (MDMA crystal), 41 போதை மாத்திரைகள் (ecstasy pills) மற்றும் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவருவதோடு, போதைப்பொருளுக்காக காத்திருப்பவர்களை கேலி செய்யும் ஒரு மீம் ஒன்றையும் போலீசார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். சமீப காலமாக பெங்களூரில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

ஜனவரி மாதத்தில் மட்டும் மங்களூருவில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரி மாதம் பெங்களூரில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்ததாக 11 பேரை பெங்களூரு நகர குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment