இந்தூர் கோயில் கிணறு இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழப்பு..! 19 பேர் மீட்பு..!

மத்திய பிரதேசத்தில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் உள்ள படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தூரில் ராம நவமியை முன்னிட்டு படேல் நகரில் உள்ள பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் பூஜைகள் செய்ய படிக்கட்டுக் கிணற்றின் அருகே பலர் கூடியிருந்தனர். அப்பொழுது திடீரென கோயிலில் உள்ள படிக்கட்டு கிணற்றின் மேல் கூரை இடிந்து விழுந்துள்ளது.

கிணற்றின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் 25க்கும் மேற்பட்டோர் கிணற்றில் விழுந்துள்ளனர். தண்ணீர் அதிகம் இல்லாத இந்த கிணறு 40 முதல் 50 அடி ஆழம் கொண்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தற்பொழுது படிக்கட்டுக் கிணற்றில் சிக்கியவர்களில் 19 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கிணற்றில் தவறி விழுந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. கிணற்றின் மேல் கூரை இடிந்து விழுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment