புத்தாண்டு முதல் நாளில் 107 கோடி ரூபாய் வசூல்.! கேரளா மதுபான கலெக்சன் ரிப்போர்ட்.!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஒரு நாளில் கேரளா முழுவதும் 107 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. 

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் தற்போது பலருக்கும் மது போதை என்பது இன்றியமையானதாக மாறிவிட்டது. அதனால், மது விற்பனையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி கொண்டே போகிறது.

நமது அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் சுமார் 107 கோடி ரூபாய்க்கு மேலாக மது விற்பனை நடைபெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

கேரள அரசுக்கு சொந்தமாக கேரளா முழுவதிலும் சுமார் 268 மது கடைகள் செயல்பட்டு வருகின்றன. தலைநகர் திருவனந்தபுரத்தில் ஒரு குறிப்பிட்ட மதுக்கடையில் மட்டும் 1 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு புத்தான்டு முதல் நாளுக்கு மட்டும் மது விற்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக கேரளா முழுவதிலும் இருந்து இந்த ஆண்டு, 107 கோடியே 14 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. என தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டுக்கு முன்னதாக பத்து நாட்களில் 686 கோடியே 28 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment