மேட்டூர் அணையின் நீர் திறப்பு 1,000 கன அடி குறைப்பு..!

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. கோடை தொடங்கியதால் அணை நீர்வரத்து குறைந்தது. கடந்த 06-ம் தேதி 188 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று முந்தினம்  195 கனஅடியாக  அதிகரித்தது.

குடிநீருக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர் வரத்தை விட வெளியேற்றப்படும் நீர் அதிகரித்ததால் கடந்த 06-ம் தேதி 105 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று முந்தினம் 104.86 அடியாக குறைந்தது.

இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கான நீர் திறப்பு 2,000 கன அடியிலிருந்து தற்போது 1,000 கன அடியாக குறைக்கப்பட்டதாகவும் , தேவை குறைந்ததால் மேட்டூர் அணையில் நீர் குறைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

author avatar
murugan