ஹேப்பி பெர்த்டே 'சூப்பர் ஒன்' ரஜினிகாந்த்!! சூப்பர் ஸ்டார் ஸ்பெஷல்!!!

‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ இந்த பெயருக்குள்ளே காந்தம் இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை சிறு குழந்தையிலிருந்து, பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகராய் திகழ்கிறார். இவர் சினிமாவின் அனைத்து வித காலகட்டத்திலும் நடித்து முடித்து விட்டார். அதாவது கருப்பு வெள்ளை காலம் முதல் டிஜிட்டல், அனிமேஷன்(கோச்சடையான்), 3D(2.O) என சினிமா வளர்ச்சியின் அனைத்து பரிணாமங்களிலும் நடித்த ஒரே நடிகர் இவராகதான் இருக்க முடியும். மற்ற நடிகர்களின் சாதனையை இவர் முறியடிப்பதில்லை, மாறாக புதிய சாதனையை படைத்து கொண்டுவருகிறார். 

சினிமாவில் ஆரம்ப கருப்பு வெள்ளை காலத்தில் காலத்தில் குணச்சித்திர நடிகராக சினிமாவில் அறிமுகமானார். பிறகு சில படங்களில் வில்லனாக தனது சினிமா பயணத்தை அடுத்த கட்டத்திற்கு மாற்றிக்கொண்டார். அதன் பிறகு தான் படத்தின் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். ஹீரோவான பிறகும் தனது வில்லத்தனமான நடிப்பும், ஷ்டைலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்த வில்லத்தனமான நடிப்பை பயன்படுத்திக்கொண்டு பில்லா, ரங்கா, அலெக்ஸ் பாண்டியன் என அதிரடி ஆக்ஷ்ன் படங்களாக நடிக்க தொடங்கினார். இடையே தில்லுமுல்லு போன்ற காமெடி  படங்களை கொடுத்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார். 

அதன் பிறகு பாட்ஷா, முத்து, படையப்பா, சந்திரமுகி, எந்திரன், கபாலி,  2.O என  பாக்ஸ் ஆபிஸையே கதிகலங்க வைக்கும் படங்களை கொடுத்து தமிழ்சினிமாவை உலக சினிமாவே எதிர்நோக்கும் படி மெகா ஹிட்களை கொடுத்து வருகிறார். 

இந்த மெகா ஹிட் ஜாம்பவான் சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று பிந்தநாள். அதற்கு திரையுலகினர் பலரும் , அரசியல் வட்டத்தில் உள்ளவர்கள் , ரசிகர்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்தநாளல கொண்டாடி வருகின்றனர்.

தினச்சுவடு பத்திரிக்கையின் சார்பாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். 

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment