வாட்ஸ் அப்பில் விரைவில் 2ஜிபி வீடியோ அனுப்பும் வசதி!

வாட்ஸ் அப்பில் பகிரப்படும் வீடியோ அளவை 100MB-லிருந்து 2 ஜிபியாக அதிகரிக்க அந்நிறுவனம் திட்டம்

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் செயலில் டெக்ஸ்ட், வாய்ஸ், வீடியோ, ஆடியோ உரையாடல்களை பயனர்கள் மேற்கொள்ளலாம். இதில் போட்டோ, டாக்குமெண்ட்ஸ் மாதிரியானவையும் ஃபைல்களும் அனுப்பிக் கொள்வதுண்டு. இருப்பினும், ஃபைல் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் (Size) இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும். அதன் காரணமாக வேறு சில அப்ளிகேஷன்களை பயன்படுத்தி பயனர்கள் அதிக அளவு கொண்ட ஃபைல்களை அனுப்பி வருகிறார்கள். மேலும், வாட்ஸ் அப்பில் பகிரப்படும் வீடியோ அளவு 100MB-ஆக இருப்பதால், பயனர்கள் கவலைகொள்கின்றனர்.

இந்த நிலையில், வாட்ஸ் அப்பில் பகிரப்படும் வீடியோ அளவை 100MB-லிருந்து 2 ஜிபியாக அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. 2ஜிபி அனுப்பும் திட்டத்தை முதற்கட்டமாக அர்ஜென்டினாவில் பரிசோதிக்கவும் வாட்ஸ் அப் முடிவு செய்துள்ளது. வாட்ஸ் அப்பின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-அடிப்படையிலான செயலிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு 2ஜிபி அளவு வரையிலான கோப்புகளைப் பகிர்வதற்கான செயல்பாடு இந்த சோதனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் வாட்ஸ் அப் பயனர்களுக்கு விரைவில் இந்த புதிய அப்டேட் அறிமுகமாக உள்ளது. இதனைத்தொடர்ந்து, மெசேஜ் ரியாக்ஷன்ஸ் என்ற அம்சத்தையும் WhatsApp செயல்படுத்திகிஹி வருகிறது. இந்த அம்சம் WhatsApp பயனர்கள் Instagram மற்றும் Messenger இல் பெறப்பட்ட செய்திகளைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட எமோஜிகளைப் பயன்படுத்தி ஒரு செய்திக்கு பதிலளிக்க உதவும். இந்த அம்சம் ஒரு ரியாக்ஷன் நோட்டிஃபிகேஷன் அம்சத்துடன் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது பயனர்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் செய்தியில் ஒரு செய்தி எதிர்வினையைப் பகிரும்போது அவர்களுக்குத் தெரிவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்