வருகிற 19-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பு சார்பில் இப்தார் விருந்து..!

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு இரு மதத்தினருக்கு இடையிலான கலவரமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டபோது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இஸ்லாமியர்களின் எதிரி அல்ல என்னும் பிரசாரத்தை பரப்புரை செய்யவும், இரு மதத்தினரிடையே நல்ல புரிதலையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காகவும் முஸ்லிம் ராஷ்டரிய மன்ச் என்னும் துணை அமைப்பை அந்நாள் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் சுதர்சனம் ஏற்படுத்தினார்.
சுமார் 2 ஆயிரம் இஸ்லாமிய குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு நிதியுதவி அளித்து வருவதாகவும், தலாக் என்னும் விவாகரத்து செய்யப்பட்ட சுமார் ஆயிரம் இஸ்லாமிய விதவை பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தந்து வருவதாகவும், ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்குவதாகவும் இந்த முஸ்லிம் ராஷ்டரிய மன்ச் அமைப்பினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. பற்றி ஒருபிரிவு மக்களிடையே உள்ள கருத்து வேறுப்பாட்டை களையும் வகையில் முஸ்லிம் ராஷ்ரரிய மன்ச் சார்பில் டெல்லியில் 19-ம் தேதி இப்தார் விருந்து நடத்தப்படவுள்ளதாக இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் அப்சல் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மதகுருக்கள் மற்றும் ஆர்,எஸ்.எஸ். தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த இப்தார் விருந்தில் பங்கேற்க வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும், பிறநாடுகளின் தூதர்களுக்கும் அழைப்பு அனுப்பப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment