Categories: வரலாறு

வரலாற்றில் இன்று! ஆன்ட்ரூ சைமன்ஸ்

கிரண் பேடி

இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், ஓய்வு பெற்ற காவலரும் ஆவார். இவர் இந்தியக் காவல் பணியில் 1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரியாவார்.

1971ஆம் ஆண்டில் ஆசிய பெண்கள் டென்னிசு போட்டியில் வெற்றி பெற்றவர் இவர். 1993இல் இவர் தில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்தபோது திகார் சிறைகளில் இவராற்றிய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டைப் பெற்றதோடன்றி 1994ஆம் ஆண்டிற்கான ரமோன் மக்சேசே விருது விருது பெற ஏதுவாய் இருந்தது. 2007ஆம் ஆண்டு இவர் விருப்பப்பணி ஓய்வு பெற்றார் 2011இல் நடந்த இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கத்தில் இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஜனவரி 2015இல் இணைந்தார்.2016 ஆம் ஆண்டு மே 29 இல் புதுச்சேரி மாநில லெப்டினென்ட் ஆளுநராகப் பொறுப்பேற்று அப்பதவியில் இருக்கிறார்.இவர் 1949ம் ஆண்டு  ஜூன் 9 (இன்று) தேதி பிறந்தார்.

 

ஜார்ஜ் ஸ்டீபென்சன்

கல்வியறிவே இல்லாமல் நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் மற்றும் கட்டுமானப் பொறியாளர் தொடர்வண்டிப் பாதையின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த தினம் இன்று.

நீராவி வண்டிகளின் போக்குவரத்திற்கு உலகின் முதல் பொது தொடர்வண்டிப் பாதைக்கான தண்டவாளங்களை அமைத்தவர். 4 அடி 8 1/2 அங்குலம் (1,435 மிமீ)நீளத்திற்கு இவர் அமைத்த இரயில் பாதை இன்றும் உலக தரமான பாதையாக உள்ளது. அது “ஸ்டீபன்சன் பாதை” என அழைக்கப்படுகிறது.

ஆன்ட்ரூ சைமன்ஸ்

ஆன்ட்ரூ சைமன்ஸ் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டி , ஒருநாள் போட்டி மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். துடுப்பாட்டங்களில் சகலத்துறையராக விளங்கிய இவர் இருமுறை துடுப்பாட்ட உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலியா  அணியில் இடம்பெற்றிருந்தார். வலது கை மட்டையாளரான இவர் வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளரும் ஆவார். களத்தடுப்பாட்டத்திலும் குறிப்பிடத் தகுந்தவராக இருந்தார்.இவர் 1975ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி பிறந்தார்.

2008 ஆம் ஆண்டின் மத்திய காலங்களில் மதுபானம் அருந்தியது மற்றும் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது ஆகிய காரணங்களினால் பெரும்பாலும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். சூன், 2009 ஆண்டில் நடைபெற்ற 2009 ஐசிசி உலக இருபது20 போட்டியின் போது அணியிலிருந்து இவர் நீக்கப்பட்டார். இது இவரின் மூன்றாவது இடைநீக்கம் ஆகும். இவரின் நடவடிக்கைகளால் பல நிருவாகிகள் இவரை ஓய்வு பெறும்படி கூறினர். தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக பெப்ரவரி 16, 2012 ஆம் ஆண்டில் சர்வதேச துடுப்பாட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

 

Dinasuvadu desk

Recent Posts

28 வயதிலே இளம் இசையமைப்பாளர் மரணம்.! அதிர்ச்சியில் தமிழ் சினிமா…

RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…

3 mins ago

உடல் எடையை குறைக்க விபரீத பயிற்சி.! 6 வயது குழந்தை உயிரிழந்த சோகம்.!

America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…

28 mins ago

கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…

39 mins ago

502 Error.! திணறிய கூகுள்… பயனர்கள் அதிருப்தி.!

Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…

1 hour ago

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

1 hour ago

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…

2 hours ago