மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிராக வழக்கு..!

தமிழகத்தில் மூடப்பட்ட  1300 டாஸ்மாக் மதுக்கடைகளை மீண்டும் திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் செல்லும் நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகைமாற்றம் செய்ப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த சாலைகளுக்கு ஓரத்தில் இருந்த ஆயிரத்து 300 மதுக்கடைகளை திறக்க மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகளை வகைப்படுத்தும் அதிகாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையருக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment