ஈரோடு மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் சுமார் 90 ஆயிரம் பேருக்கு அரசின் சார்பில் இலவசப் பேருந்து பயண அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பள்ளி மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி கடந்த கல்வி ஆண்டில் (2017-18) அரசுப் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக், தொழில்பயிற்சி நிலைங்களில் பயிலும் 22.66 லட்சம் பேருக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் இன்று (1ஆம் தேதி)பள்ளிகள் திறக்கப்படுமென அரசு அறிவித்துள்ளது.
ஈரோடுமாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, நடுநிலைப் பள்ளிகள் உள்பட 243 பள்ளிகளில் சுமார் 1 லட்சம் மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர். இவர்களில் 86,360 மாணவ, மாணவிகளுக்கு கடந்த கல்வி ஆண்டில் இலவச பேருந்து பயணஅட்டை வழங்கப்பட்டது. நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 5 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சுமார் 90 ஆயிரம் இலவச பேருந்து பயண அட்டைகள் விநியோகிக்கப்படலாம் போக்குவத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…