மதுரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்….!!!

மதுரையில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் மாநகராட்சி அதிகாரிகள் 20 குழுக்களாக பிரிந்து 381 கடைகளில் ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வில் பயன்பாட்டிற்க்காகவும், விற்பனைக்காவும் வைக்கப்பட்டிருந்த 643 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 1,98,700 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டிஸ் கொடுக்கப்பட்டு, இனிமேல் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க மாட்டோம் என உறுதிமொழி படிவமும் வாங்கியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment