மண் வேலி சரிந்து 4 தொழிலாளர்கள் பலி

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ளது குதார்தி கிராமம். இந்த கிராமத்தின் வழியாக பாயும் கோமா ஆற்றை ஒட்டி உள்ள பண்ணையில் நீர்த்தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வேலியின் அருகே சிலர் நேற்று மண் வெட்டி வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது வேலியில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த விரிசல் மேலும் விரிவடைந்து தொழிலாளர்கள் மீது மண் சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.  அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே அவர்கள் இறந்துவிட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பண்ணையில் இருந்து சட்டவிரோதமாக மண் அள்ளியபோது விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவது குறித்து ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பஞ்சாயத்து தலைவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment