புதுச்சேரி விமான நிலையத்தில் கொடிய விஷ பாம்பை விரட்டிய பெண்ணுக்கு பாராட்டு..!

புதுச்சேரி விமான நிலையத்தில் விஐபிக்களுக்கான அறையில் உயரதிகாரிகள் கூட்டத்தில் புகுந்த விரியன் (Viper) வகைப் பாம்பை பெண் ஊழியர் ஒருவர் துடைப்பத்தால் விரட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

நேற்று புதுச்சேரி விமான நிலையத்தில் இந்திய விமான நிலையங்கள் ஆணையத் தலைவர் குருபிரசாத் மொஹபத்ரா தலைமையில் உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது 6 அடி நீளமுள்ள விரியன் வகைப் பாம்பு, இருக்கைகளுக்கு அடியில் ஊர்ந்து வந்ததைக் கண்ட சிலர் அஞ்சி ஒதுங்கினர்.

அப்போது பெண் ஊழியர் ஒருவர் தரை துடைப்பானைக் கொண்டு அதை வெளியே விரட்டினார். இதையடுத்து, புதுச்சேரி ஐஆர்பி படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் தியாகு பாம்பைப் பிடித்து வனத்துறையில் ஒப்படைத்தார். தியாகுவுக்கு வெகுமதியும் பாராட்டும் வழங்கப்பட்ட நிலையில், கொடிய பாம்பைக் கண்டும் தைரியமாக செயல்பட்ட பெண் ஊழியர் நாளை கவுரவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment