பாஜக முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஸ்டாலினுடன் சந்திப்பு! பா.ஜ.க.வுக்கு எதிராக செயல்பட அழைப்பு!

மு.க.ஸ்டாலின் ,மத்தியில் பாஜக ஆட்சியை அகற்றுவதற்கான முயற்சியில் திமுக மட்டுமின்றி மேலும் பல கட்சிகளும் தமிழகத்தில் முனைப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, சத்ருஹன் சின்ஹா ஆகியோர் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நேற்று சந்தித்து நலம் விசாரித்தனர்.

அப்போது மு.க.ஸ்டாலின், ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர். சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment