நீதிபதி பி.ஹெச்.லோயா தொடர்பாக புதிய வழக்கு..!

நீதிபதி பி.ஹெச்.லோயா ((B.H. Loya)) மரண வழக்கில் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஷொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில், பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி பி.ஹெச்.லோயா, நாக்பூரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மரமணடைந்தார்.Image result for B.H. Loya

பின்னர் இந்த வழக்கை விசாரித்த வேறு ஒரு நீதிபதி, வழக்கிலிருந்து அமித்ஷாவை விடுவித்து உத்தரவிட்டார். இதனிடையே, பி.ஹெச்.லோயா மரணம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து சுயேச்சையான விசாரணை கோரிய மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு விசாரித்தது. லோயா இயற்கையாகவே மரணம் அடைந்ததாகவும், எனவே அதுகுறித்து சிறப்பு விசாரணை தேவை இல்லை எனவும் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ஏப்ரல் 19ஆம் தேதி அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, மும்பை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment