நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் – தேமுதிக தலைவர் விஜயகாந்த்

துபாயில் தங்கி சிகிச்சையை எடுத்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என்று ட்வீட்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்துக்கு உடல்நிலை பிரச்சனை காரணமாக சமீப காலமாக தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. இதனால் கட்சியை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தான் பார்த்து வருகிறார். இதனிடையே, விஜயகாந்தின் பிறந்த நாளன்று, சிகிச்சை பெறுவதற்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளதாக அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த திங்களன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சென்னை விமான நிலையத்தில் இருந்து சிகிச்சைக்காக துபாய் சென்றார். அவருடன் இளைய மகன் சண்முக பாண்டியனும் சென்றிருந்தார். இந்த நிலையில், துபாயில் தங்கி சிகிச்சையை எடுத்து வரும் விஜயகாந்த், நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்’ என புகைப்படம் என்று தெரிவித்து, அந்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்