திரைப்படமாகிறது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு..!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கப் போவதாக, பாஜக எம்.பி. பரேஷ் ராவல் ‘துணிச்சலாக’ அறிவித்துள்ளார்.

பரேஷ் ராவல் அடிப்படையில் நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். அந்த வகையில் ஏற்கெனவே தனது திட்டம் குறித்து மோடியிடம் பேசி ஒப்புதல் வாங்கி விட்டதாகவும், ஒரு சில மாதங்களில் படிப்பிடிப்பு துவங்கும் என்றும் அதில் தானே நடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
மோடியின் கேரக்டரில் நடிப்பது தனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கூறியிருக்கும் நரேஷ், தற்போது படத்திற்கான ஸ்கிரிப்டுகள் தயாரிப்பதில் (எம்.பி. வேலையை விட்டுவிட்டு) பிஸியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த படத்தில் மோடி போல நடிப்பது பரேஷ் ராவலுக்கு உண்மையாகவே சவாலாகத்தான் இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ஆனால், மோடி இளம்வயதில் தேநீர் விற்றது உண்மைதானா; அவர் விற்ற தேநீரை வாங்கிக் குடித்தவர்கள் என்று ஒருவராவது காட்டப்படுவார்களா? பட்டதாரி என்று தன்னை கூறும் மோடி, எந்தக் கல்லூரியில் படித்தார்; எந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்; யாரெல்லாம் அவரின் கிளாஸ்மேட்; திருமணமான மோடி, வேட்புமனுத்தாக்கலின் போது, மனைவி இருப்பதையே மறைத்தது ஏன்? என்ற மர்மங்களுக்கு எல்லாம் இந்த படம் விடை தருமா? என்று தெரியவில்லை.

10 லட்ச ரூபாய்க்கு கோட் அணிந்து, ஒபாமாவையே வியக்க வைத்த காட்சிகள் இடம்பெறும்? என்பதற்கும் தயாரிப்பாளர் பரேஷ் ராவல் உத்தரவாதம் தரவில்லை. படம் குறித்த தகவல்களை இப்போதைக்கு தெரிவிக்க முடியாது; ‘மீதியை வெண்திரையில் காண்க’ என்று அவர் சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment