திருவள்ளூர் அருகே மணல் குவாரி அமைப்பதை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் ஆரணியாற்றில் மணல் குவாரி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆற்றில் மணல் அள்ளினால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வேளாண்மை பாதிக்கும் என்றும், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் கூறி அதைப் பொதுமக்கள் எதிர்த்து வருகின்றனர். மணல்குவாரியை முற்றுகையிட்ட பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் மணல் குவாரி அமைப்பதை எதிர்த்து ஊத்துக்கோட்டையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதுடன், காவல்நிலையம் அருகே ஐம்பதுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment