திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது….பக்தர்கள் பரவசம்…!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா இன்று நடைபெற்றது. 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தீபத் திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 3 நிமிடங்கள் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தீபத் திருவிழாவையொட்டி பாதுகாப்புப் பணியில் சுமார் 8 ஆயிரத்து 500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அண்ணாமலையார் கோவில் தீபத்தை காண பல லட்சம் பேர் குவிந்தனர். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டிருந்தது.

dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment