தல அஜித் இனிமேலும் அமைதியாக இருக்க கூடாது !!!!

தல அஜித் நடித்த’  விஸ்வாசம் ‘தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்கள் இந்த படத்தை பொங்கல் விழா வாக  கொண்டாடி வருகின்றனர்.

‘ விஸ்வாசம் ‘ படம் முதல் நாள் வெளி வந்த போது பல கலவரங்கள், கத்திக்குத்து, அடித்தடி என பல நிகழ்வுகளும் தமிழகம் முழுவதும்  நடந்தது.தல அஜித் கூறினால் அனைவரும் கேட்பார்கள் என ரசிகர்கள்  பலர் கூறி வருகின்றனர்.

அஜித் இந்த கலவரங்கள் குறித்து மக்களிடையே பேச வேண்டும். மேலும் இது குறித்து  அஜித் அமைதியாக இருக்க கூடாது, இனிமேல் இப்படி செய்யாதீர்கள் என்று ரசிகர்கள் பலரும் தல அஜித்திடம் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு அமைதியாக  இருந்தால் அஜித்தின் இமேஜிற்கு நாளுக்கு நாள் கெட்டப்பெயர் வரும் என்று ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment