தனியார் மதுபான ஆலையில் ஆளுநர் கிரண்பேடி ஆய்வு ..!

புதுச்சேரி அருகே அய்யங்குட்டிபாளையம் பகுதியில் இயங்கிவரும் தனியார் மதுபான ஆலையில் முறைகேடாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக வந்த புகாரையடுத்து ஆளுநர் கிரண்பேடி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் தொழிற்சாலைக்கு அரசு பேருந்தில்  அதிரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தொழிற்சாலையில் நிலத்தடி நீர் எடுக்கும் பகுதிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, நீரை முறையாக பயன்படுத்துவது குறித்தும், கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்வது குறித்தும் இந்த தொழிற்சாலைக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளதாகவும், குடிநீர் என்பது ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளில் ஒன்று என்றும், ஆனால் பீர் ஆடம்பர வாழ்க்கைக்குண்டானது, பீரைவிட குடிநீர்தான் முக்கியம் என்றும், புதுச்சேரியில் நிலத்தடி நீரை பாதுகாக்க இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்றார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment