தடைகளை தகர்த்து எரியும் விநாயக தத்துவம்…!!வெற்றி தரும் தத்துவம்…!

விநாயகர்,கணேசன்,பிள்ளையார்,விக்னேஸ்வரன்,என்னற்ற பல திருநாமங்களை கொண்டுவர்.மற்ற தெய்வத்தை காண வேண்டும் என்றால் நெடுதூரம் சென்று வழிபட வேண்டும் ஆனால் இவரோ திரும்பிய திசையெல்லாம் தீர்க்கமாக திருவருள் தரும் விக்ன விநாயகர்.தன்னுள் தத்துவத்தை அடக்கிய தலைபிள்ளை இந்த பிள்ளையாரை வழிபட்டால் வாழ்வில் வரும் தடையை தகர்த்து எரியும் தத்துவ நாயகன் நம் கணேசன் இவரை வணங்கினால் வாழ்வில் உயர்நிலை அடையலாம் அதனை நிச்சயம் உச்சிபிள்ளையார் அருள்வார்.தனது தோற்றத்தையே தத்துவமாக்கிய கணேசனை கண்டு வழிபடுவோம்.

ॐ

இனி விநாயகர் தத்துவம்…!!

கணேசனின் பெரியகாதுகள்.. செல்வத்துள் செல்வம் செவிச் செல்வத்தை முதன்மையாகக் கொள்ளவேண்டும்

துன்பத்தை நீக்கும் கணேசனின் துதிக்கை .. மூச்சுக்காற்றை நீளமாக சுவாசிக்க வேண்டும் சுழுமுனைச சுவாசத்தைக்குறிக்கிது.

பேழை வயிற்றோனின் பெரியஉடல்.. மனம் குறுகாமல் பிரபஞ்சம் அளவிற்கு விரியவேண்டும் நான்குகரம் பாசாங்குசம் பற்றுபாசம் அற்றநிலையில் வாழவேண்டும்

தன் கையில் உள்ள தாமரை.. அறிவுநிலையைக்குறிக்கிறது மலர்ச்சி பெறவேண்டும்தண்ணீரில் ஒட்டாதது போல் உலகில் ஒட்டாது வாழவேண்டும்.

சதகமாக மாற்றிய மோதகம்.. பிரபஞ்சத்தோற்றத்தை விளக்கும் தோன்றும்பொருள்அனைத்தும் உருண்டை வடிவமானது இதைத்தாங்கும் மெய்ப் பொருள் பூரணமானது

அபயம்… சக்திஎனும்ஆற்றலைவழங்குவது.

Ganesha

ஒற்றைத்தந்தம் .. இடகலை சுவாசம் அமைதியை தரும் யோகத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதைக் குறிக்கிறது

மூஞ்சுரு வாகனம்.. எல்லாப்பொருட்களையும் விடலேசானவர் என்பதைக்குறிக்கிறது ஆகாசதத்துவம்

தேங்காய் தெய்வத்தன்மையை உணர்த்திய தெய்வீக கணேசன்.. மூன்றுகண் உடையது மனிதனுக்கும் மூன்றாவது கண்திறக்கப்பட வேண்டும்.

வாழைப்பழத்தால் வாழ கற்று கொடுத்தவர் நம் கணேசன்.. விதையில்லாதது போல் வினைகளற்று வாழவேண்டும் மனதின் வெண்மை மென்மையைக் குறிக்கிறது.

உலக தத்துவத்தை தன்னுள் அடக்கி தாரணியில் வாழும் மனிதர்க்கு அருள் புரியும் அற்புத கணபதியை அகிலத்தில் அவரே என்று இன்று சரண்புகுந்தால் சங்கடம் யாவும் செய்வது அறியாமல் தம்மை விட்டு செல்லும்.கற்பக களிரை,கற்பக விருட்சத்தை வணங்கி மகிழ்ச்சியை வரவைப்போம் வாழ்க்கையில் சுபம்…!

DINASUVADU

 

author avatar
kavitha

Leave a Comment