ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ், சுரினேம் மற்றும் கியூபா நாடுகளுக்கு அரசுமுறை பயணம்..!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ், சுரினேம் மற்றும் கியூபா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு வரும் ஜூன் 16-ம் தேதி அரசுமுறை சுற்றுப்பயணம்  மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளர் அஷோக் மாலிக் இன்று தெரிவித்தார்.
கிரீஸ் நாட்டின் பழங்கால தொல்லியல் பகுதிகள் மற்றும் காமன்வெல்த் போர் நினைவிடத்தை பார்வையிடும் அவர், அங்கு வாழும் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்ற உள்ளார்.
கிரீஸை தொடர்ந்து சுரினேம் நாட்டுக்கு செல்லும் ராம் நாத்கோவிந்த், அங்கு, உலக யோகா தினம் கொண்டாடப்படும் ஜீன் 21-ம் தேதி அந்நாட்டு அதிபர் தேசி பவுட்டர்ஸ் உடன் யோகா நிகழ்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இறுதியாக கியூபா செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் மிகியேல் தியாஸ்-கேனல் பெர்முடஸ் உடன் இருநாட்டு உறவுகள் குறித்து நீண்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். கியூபா புரட்சி நடைபெற்ற 1959-ம் ஆண்டுக்கு பிறகு அந்நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது
author avatar
Dinasuvadu desk

Leave a Comment