கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில்  3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை 2006 ஆம் ஆண்டு முதலீடு செய்தது. மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதலின்றி, விதிகளுக்கு மாறாக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம் இதற்கு அனுமதி அளிக்க அப்போதைய மத்திய நிதி ப.சிதம்பரம் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

மேலும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனமும் இதற்கு உதவி செய்ததாக புகார் கூறப்படுகிறது. இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment