கஜாவால் துண்டித்து விடப்பட்ட கோடியக்கரை…..இந்திய விமானப்படை வீரர்கள் 16 பேர் மாயமான விவகாரம்…ஆட்சியர் விளக்கம்..!!

இந்திய விமான படை வீரர்கள் 16 பேர் மாயமான விவகாரம் தொடர்பாக நாகை ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

மிரட்டி எடுத்த கஜாவால் முற்றிலுமாக கோடியக்கரை பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும்  நாகை வேதாரண்யம் சாலை துண்டிப்புக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோடியக்கரையில் பயிற்சி பெறுவதற்காக வந்த விமானப்படை வீரர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் 16 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கடந்த மாதம் பஞ்சாப்பில் இருந்து தஞ்சை விமானப்படை தளத்திற்கு 16 விமானப்படை விரர்களை கொண்ட குழு பயிற்சிக்காக வந்ததுர்.

Image result for மீனவர்கள் கஜா புயல்

16 வீரர்களும் தஞ்சை விமானப்படை தளத்தின் ஒரு அங்கமாக இருந்து வரும் நாகை மாவட்டம் கோடியக்கரை விமானப்படை தளத்திற்கு இந்த 16 பேரும் 2 நாட்களுக்கு முன்பு பயிற்சிக்காக சென்றனர். இந்த நிலையில் தன்னுடைய ஆட்டத்தை மெல்ல நகர்த்த தொடங்கிய கஜாவின் கோரத்தாண்டத்தில் சிக்கி நாகை மாவட்டமே  உருக்குளைந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படும் 16 பேரும் கோடியக்கரை லைட் ஹவுஸ் அருகே விமானப்படை வீரர்கள் முகாம் அமைத்து இருந்துள்ள நிலையில் இவர்கள் 16 பேரையும் பஞ்சாப்பில் இருந்து அவர்களது பெற்றோர் இன்று காலை தொடர்புகொள்ள முயற்சித்த நிலையில் தொடர்பு கொள்ளமுடியவில்லை.ஆனால் புயல் காரணமாக அப்பகுதி முழுவதும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவர்களை தொர்புகொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியது.

Image result for மீனவர்கள் கஜா புயல்

இதனால் பதற்றமும்,அச்சம் கொண்ட வீரர்களின் பெற்றோர்கள் உடனே சென்னையில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை நிலையத்தை தொடர்புகொண்டுனர்.பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த தகவலை கொண்டு நாகை ஆட்சியரை தொடர்புகொண்டு விசாரித்தபோது 16 விமானப்படை வீரர்களும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும் இதற்கு முன் அவர்களை தேடும் பணியில் கப்பற்படை வீரர்கள் ஈடுபட்டதாகவும் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதனை தெரிவித்த ஆட்சியர்  விமானப்படை வீரர்கள் 16 பேரையும் அவர்களது பெற்றோருடன் பேச வைக்கும் முயற்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment