ஐ.எஸ்.பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய பிரான்ஸ் பெண்ணுக்கு ஈராக்கில் ஆயுள்தண்டனை

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் மெலினா பக்தீர் (27). இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ஈராக் வந்த அவர் ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தார்.

அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் மெலினா கைது செய்யப்பட்டார். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 7-மாதம் சிறை தண்டணை விதித்தது.

சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்ததாக கூறி அவருக்கு இத்தண்டணை வழங்கப்பட்டது. தண்டணை காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேறி பிரான்சுக்கு செல்லவும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் வழக்கை விசாரித்த கோர்ட்டு ஈராக் தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த மெலினாவுக்கு ஆயுள் தண்டணை விதித்தது. இந்த தண்டணையை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக அவரது வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து ஆயுள் தண்டணை பெற்ற அவர் பிரெஞ்சு குடிமகன் என்ற நிலையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஏப்ரலில் ஜமிலா புடோடியூ (29) ஆயுள்தண்டனை பெற்றார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment