எம்டெக், எம்பிஏ, எம்.பில் படித்துவிட்டு ‘கான்ஸ்டபிள்’ ஆன பட்டதாரிகள்…!

ஹரியானா மாநிலத்தில், எம்டெக், எம்பிஏ, எம்.பில் என்று பெரிய படிப்புக்களை படித்தவர்கள், வேலை கிடைக்காமல் சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் வேலையில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.ஹரியானா காவல்துறை டிஜிபி பி.எஸ். சாந்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.

ஹரியானாவில் பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் 4 ஆயிரத்து 225 போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான விண்ணப்பம் கோரப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது பயிற்சியையும் முடித்துள்ள இவர்கள் மே 20-ஆம் தேதி பல்வேறு இடங்களில் பணி அமர்த்தப்படுகின்றனர். மதுபான் நகரில் நடக்கும் இதற்கான விழாவில், முதல்வர் மனோகர்லால் கட்டார் பங்கேற்கிறார்.இந்நிலையில், இந்த முறை போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் தகுதிகள் குறித்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில் கான்ஸ்டபிள் வேலைக்கு எடுக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 827 பேர், கிராமப்புறங்களில் இருந்தும், 398 பேர் நகர்ப்புறங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் 2 பேர் எம்.பில் பட்டதாரிகள். எம்.டெக் படித்தவர்கள் 15 பேர். எம்சிஏ படித்த இளைஞர்கள் 16 பேர். எம்பிஏ படித்த இளைஞர்கள் 36 பேர். எம்.காம். முடித்தவர்கள் 38 பேர். 103 பேர் எம்.ஏ முடித்தவர்கள். 273 பேர் பி.டெக் முடித்தவர்கள். பிசிஏ படித்தவர்கள் 51 பேர், எல்எல்பி முடித்தவர்கள் 3 பேர். பிஎஸ்சி படித்தவர்கள் 434 பேர். பிகாம் முடித்தவர்கள் 215 பேர். பிஏ முடித்தவர்கள் 844 பேர். டிப்ளமோ படித்தவர்கள் 23 பேர். 65 பேர் 12-ம்வகுப்பு முடித்து, ஐடிடி, பாலிடெக்னிக் முடித்துள்ளனர். 2028 பேர் 12-ம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment