உளவு பலூன் விவகாரம்; சீன பயணத்தை ஒத்திவைத்த வெளியுறவுத்துறை அமைச்சர்.!

அமெரிக்காவில் சீன உளவு பலூன் பறந்ததையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் தனது சீன பயணத்தை ஒத்திவைத்துள்ளார். 

அமெரிக்க வான்வெளியின்மீது சந்தேகத்திற்குரிய சீன பலூன் பறந்தது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், தனது சீனா செல்லும் பயணத்தை தற்போதைக்கு கைவிடப்போவதாக முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எங்கள் வான்வெளியில் இந்த பலூன் பறந்தது, அமெரிக்க இறையாண்மையை மீறுவதாகும் என்று கூறியுள்ளது.

அமெரிக்காவில் பறந்த பலூன், முக்கியமாக வானிலை ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சிவிலியன் ஏர்ஷிப், இது அமெரிக்க வான்வெளியில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாடின்றி நுழைந்தது என்று சீன வெளியுறவு அமைச்சகம், கூறியிருந்தது.

இது குறித்து பிளிங்கன் கூறும்போது, இந்த கண்காணிப்பு பலூன் நமது வானத்தில் அமெரிக்காவிற்கு மேல் இருப்பது சர்வதேச சட்டத்தின் தெளிவான மீறல் மற்றும் தெளிவாக ஏற்றுக்கொள்ள முடியாதது, இதனை சீனாவுக்கு நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம், ஏற்கனவே நாங்கள் சீனா செல்ல திட்டமிட்டிருந்த இந்த பயணத்தை தற்போது ஒத்திவைத்து கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment