உச்சகட்ட பாதுகாப்பில் பிரதமர் மோடி ..!மந்திரிகள் அதிகாரிகள் கூட நெருங்க தடை..!

பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதிதிட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியதையடுத்து, 2019 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அவருக்கான பாதுகாப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கு எப்போதும் அதிஉயர் பாதுகாப்பு எச்சரிக்கை எழுந்துள்ள நிலையில், அவருக்கான பாதுகாப்பு வழிகாட்டுதலை மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.
சிறப்பு பாதுகாப்பு படையின் சோதனையின்றி மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பிரதமரை நெருங்க அனுமதிக்க கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது. 2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவிற்கு பிரசாரம் செய்வதில் பிரதமர் மோடி முக்கியமான நபர். அவர் சாலை வழியாக பிரசாரம் செய்வதை நிறுத்தவும், அதற்குப் பதிலாக பொதுக்கூட்டங்களில் பேச செய்யுவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, பாதுகாப்பை இதற்கு தீவிரப்படுத்த சிறப்பு பாதுகாப்பு படையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் இத்திட்டத்தில் பங்குப்பெற்றுள்ள அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். புதிய விதிமுறைகள் தொடர்பாக பிரதமரின் நெருங்கிய பாதுகாப்பு குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 5 பேரை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர்களுக்கு மாவோயிஸ்டு இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டது தெரிய வந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவருக்கான பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்பட்டது எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மேற்கு வங்காளம் சென்ற போது 6 அடுக்கு பாதுகாப்பு வளையத்தையும் மீறி ஒருவர் அவருடைய பாதத்தை தொட முடிந்தது, பாதுகாப்பு முகமைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு எச்சரிக்கை தொடர்பான உள்ளீடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது, பாதுகாப்பு தொடர்பாக அனைத்து நடவடிக்கையும் முன்னெடுக்க பாதுகாப்பு முகமைகளுக்கு உத்தரவிடப்பட்டது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment