இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் முதலிடம்! தேசிய பெண்கள் ஆணையம் மறுப்பு

தேசிய பெண்கள் ஆணையம் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக வெளியான ஆய்வறிக்கையை ஏற்க மறுத்துள்ளது.

தாம்சன் ராய்டர்ஸ் ஃபவுண்டேசன் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக  தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை மறுத்துள்ள தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா, வெறும் 25 பெண்களிடம் மட்டுமே ஆய்வை நடத்தி விட்டு இவ்வாறு சொல்வதால், தமக்கு இதில் நம்பிக்கையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

வழக்குப்பதிவு எண்ணிக்கைகள் அதிகமாக உள்ளது என்ற போதிலும், முதலிடத்திற்கு செல்லும் அளவுக்கு குற்றங்கள் அதிகரிக்கவில்லை என்றும் ரேகா சர்மா கூறியுள்ளார். அறிக்கையில் குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment