ஆப்பனூர் கோயிலில் மாட்டுவண்டி பந்தயம்

ராமநாதபுரம் :  கடலாடி அருகே ஆப்பனூர் கருப்பணசாமி கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி பெரியமாடு, சின்னமாடு இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தயமானது பெரியமாடுகள் போட்டியில் ஆப்பனூர் முதுகுளத்தூர் சாலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரையிலான போட்டியில் 15 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டது. இதில் மருகால்குறிச்சி பழனி முதலிடத்தையும், தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரை முருகன் இரண்டாம் இடத்தையும், வெலாங்குளம் கண்ணன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

சின்ன மாடுகள் பந்தயத்தில் அரியநாதபுரம் முதல் தேவர்குறிச்சி வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்த  17 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டது. இதில் சாயல்குடி மதன்குமார் முதல் இடத்தையும், ஜக்கமால்புரம் கலா இரண்டாம் இடத்தையும், ஆப்பனூர் அரியநாதபுரம் வில்வநாதன் கருப்பசாமி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இரண்டு பிரிவு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கபணமும், குத்துவிளக்குகளும் விழா கமிட்டிசார்பாக  பரிசுகளாக் வழங்கப்பட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment