உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்! நீண்ட நாள் வாழ ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்!

நாம் நிம்மதியாக, சந்தோசமாக வாழ்வதற்கு நமது உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்று. நாம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். 

இந்நிலையில், 1948ஆம் ஆண்டு, உலக சுகாதார மையம் தொடங்கப்பட்ட ஏப்ரல் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் உலக சுகாதார தினமாகக் கொண்டாடி வருகிறோம். நமது முன்னோர்களின் உணவு பழக்கம் மற்றும் பாரம்பரிய கலாச்சாரம் தான் அவர்கள் நீண்ட நாள் வாழ்வதற்கு காரணமாக அமைந்தது. 

ஆனால், இன்றைய தலைமுறையினர் தமிழ் உணவு கலாச்சாரங்களை மறந்து, மேலை நாட்டு உணவுகள் தான் விரும்பி சாப்பிடுகிறோம். இந்த உணவுகள் நமது உடல் ஆரோக்கியதை மேம்படுத்துவதை விட, ஆரோக்கியத்திற்கு பல கேடுகளை தான் விளைவிக்கிறது. 

இந்த உணவுகள் நமது உடல் ஆரோக்கியதை மட்டுமல்லாது, நமது ஆயுள் நாட்களையே குறைத்து விடுகிறது. அன்றைய உணவுகள் நமது முன்னோர்களை நோய்கள் அணுகாமல் காத்தது. ஆனால், இன்று புதிய நோய்கள் உருவாக்குவதற்கே, இந்த மேலை நாட்டு உணவுகள் தான் காரணமாக அமைகிறது. 

எனவே, உலக சுகாதார தினமான இன்று, நாம் மேலை நாட்டு உணவுகளை உண்பதை தவிர்த்து, நமது உடல் ஆரோக்கியதை மேம்படுத்தக் கூடிய தமிழ் கலாச்சார உணவுகளை உண்பதை வாழக்கமாக கொள்வோம். நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்போம். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.