கொரோனா வைரஸ் தாக்குதல் நிவாரணத்திற்காக தனது 6 மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய மல்யுத்த வீரர்!

கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. தற்போது

By Fahad | Published: Apr 02 2020 01:42 PM

கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த பாதிப்பு சீனாவில் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் 500-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் நிவாரணத்திற்காக பலரும் நிதி வழங்கி வருகிற நிலையில், ஹரியானாவை சேர்ந்த இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கொரோனா வைரஸ் தாக்குதல் நிவாரணத்திற்காக தனது 6 மாத சம்பளத்தை வழங்கியுள்ளார். இவர் ரயில்வேயில் சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.