6 இந்திய மாநிலங்களில் கல்வி தரத்தை மேம்படுத்த ரூ.3,700 கோடி கடன்- உலக வங்கி .!

இந்தியாவில் 6 மாநிலங்களில் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த உலக வங்கி ரூ.3,700 கோடி கடன் அளிக்க ஒப்புதல் கொடுத்துள்ளது.

உலக வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்திய மாநிலங்களில் பள்ளிக் கல்வி தரத்தை மேம்படுத்தவும் அனைவருக்கும் கல்வி என்ற அரசின் லட்சியத்துக்கு ஆதரவு அளிக்க கடந்த 1994-ம் ஆண்டு முதல் உலக வங்கியுடன், இந்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 24-ஆம் தேதி உலக வங்கியின் நிா்வாக இயக்குநா்கள் குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் , இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்த ரூ.3,700 கோடி கடனுதவி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், கேரளா, மகாராஷ்டிரா,மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஒடிஷா ஆகிய 6 மாநிலங்கள் பயன்பெறும்.

மேலும், 15 லட்சம் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 17 வயதுக்குட்பட்ட 25 கோடி மாணவர்கள் மற்றும் 1 கோடி ஆசிரியா்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan