கடந்த பட்ஜெட்டில் ரயில்வே துறையில் என்ன அறிவிப்பு வெளியானது ?

  • பிப்ரவரி மாதம் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

By Fahad | Published: Apr 01 2020 04:55 AM

  • பிப்ரவரி மாதம் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
  • கடந்த பட்ஜெட்டில் ரயில்வே என்ன அறிவிப்பு வெளியானது என்பதை பார்ப்போம். 
2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.கடந்த பட்ஜெட்டில் ரயில்வே என்ன அறிவிப்பு வெளியானது என்பதை பார்ப்போம். 2019-2020-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.தாக்கல் செய்த பின்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ரயில்வே துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தனியார் பங்களிப்புடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அடுத்த வரும் 12 ஆண்டுகளில் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். ரயில்வே துறையில் தண்டவாளங்கள் அமைத்தல், பயணிகள் ரயில் இயக்கம் மற்றும் சில கட்டுமானங்கள் ஆகியவை தனியார் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.