ஒரு குழந்தையை கற்பழித்து கொல்றதை விட பெரிய தப்பு என்ன இருக்க முடியும் - கவின் ஆவேசம் ..!

7 வயது குழந்தைக்கு நடந்த கொடூர சம்பவம் குறித்து கவின் தனது இன்ஸ்டாகிராம்

By bala | Published: Jul 04, 2020 05:14 PM

7 வயது குழந்தைக்கு நடந்த கொடூர சம்பவம் குறித்து கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

அறந்தாங்கியைச் சேர்ந்த காணாமல் போன 7 வயது சிறுமியின் உடல் வறண்ட குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

குழந்தைக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து பிரபலங்கள் பலரும் கண்டன குரல் எழுப்பி வருகின்ற  நிலையில், பிரபல நடிகரான கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "அந்த பதிவில் இன்னும் எத்தனை ஹேஷ்டேக் போடணும், இன்னும் எத்தனை நியாயம் கேட்கணும். இன்னும் எவ்வளவு போராடனும்.

"அந்த குழந்தை மாஸ்க் போட்டு சிரிச்சுக்கிட்டு இருக்குற ஒரு போட்டோ, இன்னொரு போட்டோவை பார்க்க கூட முடியல. நல்லா இருப்பிங்ககளா டா நீங்க எல்லாம், ஒரு குழந்தையை கற்பழித்து கொல்றதை விட பெரிய தப்பு என்ன இருக்க முடியும். பொண்ண பெத்தவன் எல்லாம் பயப்படுற மாதிரி இந்த தப்பெல்லாம் செய்றவனும் பயப்படனும் தானே. அதுக்காகவாச்சும் ஒரு சட்டம் பொறக்க கூடாதா என்று கோபத்துடன் பதிவு செய்துள்ளார்.

 
 
View this post on Instagram
 

#JusticeForJeyapriya

A post shared by Kavin M (@kavin.0431) on

Step2: Place in ads Display sections

unicc