வன்முறை நிறுத்தினால் மட்டுமே குடியுரிமை எதிரான வழக்கு விசாரிக்கப்படும்-தலைமை நீதிபதி.!

  • நாடு முழுவதும் வன்முறை நிறுத்தினால் மட்டுமே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியுள்ளார்.
  • நீதிமன்ற நடவடிக்கை அமைதியைக் கொண்டு வருவதற்காக இருக்க வேண்டும் என  கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமல்படுத்தியது முதல் இந்தியா முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக எதிர்க் கட்சிகளும் தீவிர போராட்டத்தை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் பல்வேறு கல்லூரி மாணவர்களும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்த ஒரு சில இடங்களில் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளன.

சமீபத்தில் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இது போன்று பல இடங்களில் வன்முறைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் வன்முறை நிறுத்தினால் மட்டுமே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியுள்ளார். தற்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வழக்குகளை விசாரித்து அமைதியைக் கொண்டுவர முடியுமா என தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கை அமைதியைக் கொண்டு வருவதற்காக இருக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியுள்ளார்.

author avatar
murugan