முருகன் சஷ்டி விரதம் தெரியும்..!இது என்ன விநாயகர் சஷ்டி விரதம்..!!

தமிழ்க் கடவுள் முருகன் என்று அழைக்கப்படுபவர்.இவருக்கு இருக்கும் விரதங்களில் மிகவும் பிரசிப்பெற்ற விரதம் சஷ்டி விரதம்.இந்த விரத்தினை மாதம்,மாதமும் -ஐப்பசி மாதத்தில் தொடர்ந்து 6 நாட்கள் இருந்தும் அனுசரிப்பார்.இவ்விரத்தினை மேற்கொள்வர்கள் சகல ஐஸ்வரியங்களையும் பெறுவர் என்பது ஐதீகம்.

நாம் எல்லோருக்கும் தெரிந்து முருகனுக்கு சஷ்டி விரதம் இருப்பார்கள் என்று அதே போல் விநாயகருக்கும் சஷ்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.இந்த விரத்தினை மேற்கொள்ளுபவர்கள் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை தொடங்கி மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்களுக்கு கடைபிடிக்க வேண்டும்.

இந்த விரதமுறையில் ஆண்கள் வலக்கையிலும் ,பெண்கள்  இடக்கையிலும் 21 விதமான இலைகளான  காப்பினை கையில் கட்டிக் கொள்கின்றனர்.’முதல் 20 நாட்களிலும் ஒரு வேளை உணவினை மட்டும் உட்கொள்கின்றனர்.கடைசி நாள் முழு உபவாசம் மேற்கொண்டும் அதனுடன் பலவிதமான  உணவுப்பொருள்களை தானமாக கொடுப்பர்.

இந்த விரத்தின் பலன்- நல்ல வாழ்க்கைத் துணை, நற்புத்திரபேறு ,குறைவில்லாத ஞானம் ,புகழ்,கீர்த்தி கிடைக்கும்.

 

author avatar
kavitha