தலயின் பிறந்தநாளுக்கு இந்தியளவில் நம்பர் 1 இடத்தில் விஜய்யின் ஹேஷ்டேக்..!

அஜித் பிறந்த நாளான இன்று ட்வீட்டரில் மோதி கொள்ளும் தல மற்றும் தளபதி ரசிகர்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து தமிழ் வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் தான். வழக்கமாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சமூக வலைத்தளங்களில் அடித்து கொள்வார்கள்.

இன்றைய தினம் அஜித் பிறந்தநாளை அஜித் ரசிகர்கள் #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி கோலாகலமாக திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர். அதற்கு விஜய் ரசிகர்கள் சலித்தவர்கள் அல்ல என்பதை காட்ட சமூக வலைத்தளங்களில் #NanbarAjith, #VijayTheFaceOfKollywood  மற்றும் # Master போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி இந்திய அளவில் டிரெண்டாக்கி சாதனை செய்து வருகின்றனர்.