‘கோலி சோடா’ இயக்குனருடன் கைக்கோர்த்த ‘கொலைகாரன்’ விஜய் ஆண்டனி!

கொலைகாரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் ஆண்டனி, காக்கி, அக்னி சிறகுகள், தமிழ்ச்செல்வன் என மிகவும் பிஸியான நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரது அடுத்த படம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கோலி சோடா படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.