இந்தியாவில் முதன் முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில்!

இந்தியாவில் முதல்முதலாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கம் மாநிலம் ஹூக்ளி நதியின் கீழ் கட்டப்பட்டிருக்கும் இந்த பாதையில் நீர்க்கசிவு ஏற்படாமல் இருக்க தற்போது  3 அடுக்கு வடிவில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. இந்த பாதையானது 50 அடி அகலமும் 520 மீட்டர் தூரமும் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் மட்டுமே இருக்கும் இந்த வசதி இந்தியாவிலும் அறிமுகப்படுத்துகிறது. விரைவில் இந்த பாதையில் ரயில்கள் செல்லும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார்.