‘குடியுரிமை திருத்த சட்டம் பாரபட்சம் வாய்ந்தது!’ ஐநா மனித உரிமைகள் ஆணையம் அதிருப்தி!

  • குடியுரிமை சட்ட திருத்த மசோதாவானது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு தற்போது சட்டமாக்கப்பட்டுவிட்டது. 
  • இச்சட்டம் அடிப்படையில் பாரபட்சமானது என ஐநா மனித உரிமைகள் ஆணையம் டிவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் குடியேறி வாழ்ந்து வரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களில்  முஸ்லீம் அல்லாத மற்ற மதத்தினருக்கு விரைவில் குடியுரிமை வழங்கும் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசானது இரு அவைகளிலும் நிறைவேற்றியது. பின்னர் அச்சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டுவிட்டது.

இந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டிவிட்டரில், இந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் அடிப்படையில் பாரபட்சமானது.  குறிப்பிட்ட சில அமைப்பு சார்ந்தவர்களை பாதுகாப்பது வரவேற்கதக்க விஷயம் தான். ஆனால், அதே போல நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பை வழங்கவில்லை. என பதிவிட்டு ஓர் அறிக்கையையும் ஐநா மனித உரிமைகள் ஆணையம் இணைத்து வெளியிட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.