டிரம்ப் நிர்வாகம் திட்டம்.! H4 விசாவில் குளறுபடி..!

அமெரிக்கா, எச்1பி விசா பெற்றிருப்பவரின் கணவனோ மனைவியோ சட்டபூர்வமாக வேலைவாய்ப்பு பெற அனுமதிக்கும் முறையை முடிவுக்கு கொண்டுவர  திட்டமிட்டு வருகிறது.

அமெரிக்காவில் எச்1பி விசாவில் பணிபுரிபவரின் கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு எச்4 விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது 2015ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட சிறப்பு உத்தரவின் அடிப்படையில் எச்4 விசா வைத்திருக்கும் கணவனோ மனைவியோ  ஒர்க்பெர்மிட் பெற்று சட்டபூர்வமாக பணிகளுக்குச் செல்கின்றனர்.

ஆனால் இந்த முறையை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டால் எச்4 விசா பெற்றுள்ளவர்கள், குறிப்பாக இந்தியாவை சேர்ந்த 70 ஆயிரம் பேர் அமெரிக்காவில் சட்டபூர்வ பணிவாய்ப்புகளை பெற முடியாத நிலை ஏற்படும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment