சீனாவில் இந்திய செய்தித்தாள்கள் மற்றும் வலைத்தளங்களை பயன்படுவதுவதில் சிக்கல்.!

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த 15-ம் தேதி சீன ராணுவம்

By murugan | Published: Jun 30, 2020 12:27 PM

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த 15-ம் தேதி சீன ராணுவம் நடத்திய அத்துமீறல் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்நிலையில், தொடர்ந்து நிலவி வரும் மோதலை அடுத்து இருநாட்டு எல்லைப் பகுதியிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதையடுத்து, மத்திய அரசு நேற்று அதிரடி நடவடிக்கையாக சீனாவின் அனைத்து விதமான ஆப்பிற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால்,  'டிக் டாக், ஷேர் இட்,  போன்ற சீனாவின் 59 செயலிகளுக்கும் இந்தியாவில் முற்றிலும்  தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சீனாவில், (வி.பி.என்) சேவை இல்லாமல் இந்திய செய்தித்தாள்கள் மற்றும் வலைத்தளங்களை சீனாவில் பயன்படுத்தமுடியவில்லை, சீன செய்தித்தாள்கள் மற்றும் வலைத்தளங்கள் இந்தியாவில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டாலும், சீனாவில் உள்ளவர்கள் வி.பி.என் (VPN) சேவை மூலம் மட்டுமே இந்திய ஊடக, வலைத்தளங்களை பயன்படுத்தமுடிகிறது.

சீனாவில், இந்திய தொலைக்காட்சி மற்றும் சேனல்களை இப்போது ஐபி டிவி மூலம் காணலாம். எக்ஸ்பிரஸ் வி.பி.என் (ExpressVPN) கடந்த இரண்டு நாட்களாக சீனாவில் ஐபோன் மற்றும் டெஸ்க்டாப்புகளில் வேலை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc